Flax Seed Uses In Tamil

எடை குறைக்கும், முடி வளர்க்கும், மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்.. அருமருந்தாகும் ஆளிவிதைகள்..!

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று மருத்துவரிடம் சென்றவர்களுக்குத் தெரியும். அவர் பரிந்துரைத்த பத்து உணவுகளில் `ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர்’ கட்டாயம் இடம் பிடித்திருக்கும். சமீப காலமாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பலர், `ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர் கலந்த வெதுவெதுப்பான நீரைக் காலையில் வெறும் வயிற்றில் பருகுங்கள்,  தொப்பைக் குறையும்’ என்று அறிவுறுத்துகின்றனர். சிலர் சாலட்டில் தூவியும் இதை உட்கொள்கின்றனர்.

எங்கே கிடைக்கும் இந்த ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர்? எல்லா சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும். `அப்படியானால், இது வெளிநாடுகளில் விளையும் விலை உயர்ந்த உணவா?’ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இது நம் நாட்டில் இருக்கும் வெள்ளரி விதை, பூசணி விதை போன்றவற்றைப் போன்ற ஒன்றுதான். இதனை `ஆளி விதை’ (Flax Seeds) என்று கூறுவார்கள். ஆனால் இதன் மகிமையை நம்மைவிட வெளிநாட்டினர் அதிகம் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் சாப்பிடும் உணவில் கட்டாயம் இது இடம் பிடித்திருக்கும்.

இந்த விதையை அப்படியே எடுத்துக்கொண்டால் செரிமானக் கோளாறு உண்டாகலாம். அதனால் இதைப் பொடியாகத்தான் உட்கொள்ள வேண்டும்.சரி… இனி இதில் நிறைந்துள்ள சத்துகளையும், உடல் எடை குறைய இது எப்படித் துணைபுரிகிறது என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

ஆளி விதை

 

* ஆளிவிதையில் நார்சத்தின் அளவு அதிகம். இதைச் சரியான அளவில் உட்கொண்டால் அதிகம் பசியெடுக்காது. அது மட்டுமல்லாமல், உடல் எடையைக் கச்சிதமாக வைத்திருக்கவும் உதவும். துரித உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் இருக்காது. இதிலுள்ள நார்ச்சத்து உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தவிர்த்து, இதய நோய், பக்கவாதம் வராமல் பாதுகாக்கும்.

* `லிக்னன்ஸ்’ (Lignans) எனப்படும் ஒருவகை ஆன்டிஆக்ஸிடன்ட் ஆளி விதையில் அதிக அளவில் உள்ளது. இது நேரடியாக உடல் எடையை குறைக்கத் துணைபுரியாவிட்டாலும், செல்களின் செயல்பாட்டை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பை எரிக்கத் துணைபுரியும். அத்துடன் உடலுக்குச் சிறந்த ஊட்டச்சத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும்.

* குறைந்த அளவு கார்போஹைட்ரேட், மாவுச்சத்து, சர்க்கரை ஆகியவற்றைக்கொண்டது. அதனால் கலோரியின் அளவும் குறைவாகவே உள்ளது. இதில் நார்ச்சத்தின் அளவுதான் அதிகம்.

* ஆளிவிதையில் 20 % புரதச்சத்து நிறைந்துள்ளதால், எளிதில் எடையைக் குறைக்க உதவும். அத்துடன் சைவப் பிரியர்களின் உடலுக்கு புரதச்சத்து அதிகம் தேவைப்பட்டால், ஆளிவிதைதான் பெஸ்ட் சாய்ஸ்.

* இது ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்தது. பசியைக் கட்டுப்படுத்தி, நிறைவைத் தந்துவிடும்.

* ஹார்மோன் குறைபாடு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வுமற்றும் மன உளைச்சலுக்கு சிறந்த மருந்து. தொடர்ந்து இதை உட்கொண்டு வந்தால், முடி உதிர்வது மட்டுப்படும்; முடி வளர்வதற்கு உதவும்.

* ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். அந்த நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, பதற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். அத்துடன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் காக்கும். கர்ப்பப்பைச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

 

ஆளி விதை எண்ணெய்  மற்றும் ஆளி விதை மாத்திரைகளை உட்கொள்ளலாமா? 

ஆளி விதை எண்ணெய் மற்றும் ஆளி விதைகளால் தயாரிக்கப்பட்ட மாத்திரையை இன்றைக்கு பலரும் உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இதன் எண்ணெயை சாலட்டில் சேர்த்துக்கொள்ளலாமே தவிர, சமைக்கும்போது உபயோகிக்கக் கூடாது. ஆளிவிதை எண்ணெயை குறிப்பிட்ட அளவுக்கு மேல் சூடாக்கினால், அது உணவை ஊசிப்போக வைத்துவிடும். ஆளிவிதை மாத்திரையை நாள் ஒன்றுக்கு ஒரு முறைதான் உட்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் வழக்கமாகப் பருகும் நீரைவிட அதிக அளவில் குடிக்க வேண்டும். (ஆளி விதை மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.)

பக்கவிளைவுகள்…

* நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் ஒரேடியாக உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. சிறிது சிறிதாகத்தான் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* இதை உட்கொள்ளும் நாள்களில் அதிக அளவில் நீர் பருகவில்லை என்றால் மலச்சிக்கல் , வாய்வு போன்ற உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

* கர்ப்ப காலங்களின் ஆரம்பகட்டத்தில் இதை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், இது இனப்பெருக்க அமைப்பின் வளர்ச்சியை பாதித்துவிடும்..

 

ஆளி விதைப் பொடியை உணவில் எப்படி சேர்த்துக்கொள்வது?

* சப்பாத்தி மாவு, தோசை மாவுகளில் ஆளிவிதைப் பொடியை சேர்த்துக்கொள்ளலாம்.

*  மில்க் ஷேக், ரைத்தா, ஓட்ஸ், கஞ்சி, சூப், சாலட், மோர், குழம்பு ஆகியவற்றில் ஒரு டீஸ்பூன் ஆளிவிதைப் பொடியை    சேர்த்துக்கொள்ளலாம்.

 

ஆளி விதை

 

ஆளி விதை மில்க் ஷேக் :

தேவையானவை :

தேங்காய் பால் – 1 கப்
ஆளிவிதைப் பொடி – 2 டீஸ்பூன்
ஸ்ட்ராபெர்ரி – 1 கப்
வாழைப்பழம் – 2 துண்டுகள்
தேன் – 2 டீஸ்பூன்.

செய்முறை :

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.
பிறகு, அதை ஒரு கிளாஸில் ஊற்றி , தேவைப்பட்டால் உலர் பழங்கள், துண்டாக நறுக்கியப் பழங்களை சேர்த்தும் பருகலாம்.
ஆளிவிதை மில்க் ஷேக் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அனைத்தையும் தரும்.

– M.MONI

4 WAYS ACTIVATED CHARCOAL CAN IMPROVE YOUR SKIN

Activated Charcoal for Skin

Activated charcoal – also referred to as activated carbon – is charcoal that has undergone a heating process that makes it safe for medicinal use. This process, which increases the charcoal’s adsorptive ability, allows it to expand into a porous surface capable of trapping a multitude of toxins and chemicals.

While its main use throughout history has been as an internal supplement for easing digestive distress and detoxing, its properties have recently been found to benefit the skin.

4 ways activated charcoal can improve your skin

1—HELPS REMOVE IMPURITIES

Remember how we talked about charcoal’s adsorptive ability? No, this isn’t a misspelling of absorption, but a different process that involves attracting chemicals and toxins using an electric charge. The surface of activated charcoal, filled with millions of tiny pores, has a negative charge that attracts and binds with positively-charged toxicants.

The adsorptive ability of activated charcoal is so powerful, in fact, that for the last 100 years it has been used internally as an antidote to serious poisoning.

This adsorptive quality can have a powerful effect when it comes to binding to impurities on the surface of our skin, such as dirt, pollutants from our environment, and build-up.

2—GENTLY EXFOLIATES

In addition to removing impurities, activated charcoal’s slightly gritty texture makes it a great option for gentle exfoliation.

Exfoliation is essential for removing buildup on the surface of our skin, which can clog pores, further exacerbate blemishes, and result in an uneven, dull appearance. Activated charcoal helps us achieve even, supple skin with a one-two combination of exfoliation and simultaneous purification. Plus, it’s gentle enough to use on sensitive skin since the granules are so small.

3—BALANCES OILY SKIN

While natural oil production is necessary for keeping our skin moisturized, glowing, and free of wrinkles, too much can be a problem. Oily skin can trap dirt and other impurities from the environment, which then sit on our skin and result in clogged pores—especially if you aren’t regularly exfoliating.

Activated charcoal, again with its adsorptive quality, can bind to these impurities and excess oil, while gently loosening deeply-ingrained particles with its gritty texture.

4—SHRINKS APPEARANCE OF PORES

Excess oil and dead skin can become trapped in pores over time, causing them to enlarge with debris. Large pores can give us a tired, aged look – and who wants that?

Using activated charcoal as a mask and scrub can help loosen the debris clogging up your pores. In addition, it will also adsorb any foreign impurities that may have slipped into your enlarged pores.

how to use activated charcoal

You can purchase activated charcoal either in loose powder form, or in capsule form. If you’re using a capsule, simply break open the capsule to use externally. Also, various brands of activated charcoal are derived from different substances, such as nutshells, coconut husk, peat, wood, coir, lignite, and coal. Of course, your best option is to choose an activated charcoal powder derived from natural substances like coconut shells.

Ready to get started with activated charcoal? Below are two recipes for your skin: a detoxifying mask to remove impurities and an exfoliating charcoal mask to get that deep debris out of your pores. Keep in mind that while activated charcoal won’t stain your skin, it will stain other surfaces like countertops and clothes, so be careful during application.

DIY ACTIVATED CHARCOAL DETOX MASK

Ingredients:

1/2 Tablespoon Activated Charcoal Powder
1/2 Tablespoon Rosewater (or regular if you don’t have it)
1/2 Tablespoon Bentonite Clay
Optional: Dab of raw honey for hydration

Instructions:

Combine charcoal, rosewater, and other ingredients if you’re adding them. Know that this mixture will be slightly runnier than many other types of masks.
Apply to a clean face and let sit for 10 minutes.
Rinse and pat dry.

ACTIVATED CHARCOAL SCRUB

Ingredients:

1/2 Tablespoon Activated Charcoal Powder
1/2 Tablespoon Rosewater
2 teaspoons coconut palm sugar
2 teaspoons honey

Instructions:

Combine ingredients and apply to a clean face. Use gentle circular motions over the entire face to loosen dead skin cells and other impurities from the pores. Rinse and pat dry, following with a moisturizer.

How do you like to use activated charcoal? Let us know in the comments below!

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்

சோற்றுக் கற்றாழையின் சாறு அல்லது உள்ளிருக்கும் கூழப்பகுதியை தினமும் அளவோடு சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.

சோற்றுக் கற்றாழை உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் மேலுக்கு உபயோகப்படுத்துவதாலும் பெண்கள் மற்றும் ஆண்களின் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும்.

சோற்றுக் கற்றாழையின் இளமடலை தோல் சீவி சோற்றைச் சுத்திகரித்து உடன் சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துச் சாப்பிட குருதியும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.

சோற்றுக் கற்றாழையை ஓரிரு சாக்லேட் அளவு வில்லைகளாக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்ட உணவு குடலில் தங்கி நஞ்சாகி நமக்குத் துன்பம் தரும் நோய்களைத் துடைக்கும் வகையில் குடலுக்கு பாதிப்பின்றி தேங்கிய நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றிலுள்ள வாயு வெளியேற்றப்படுவதோடு மன இறுக்கமும் (ஸ்ட்ரெஸ்) தணிந்து ஆரோக்கியம் கிடைக்கின்றது.

100 கிராம் கற்றாழைச் சோற்றை எடுத்துக் கொண்டு அத்தோடு 10 கிராம் ஊறவைத்த வெந்தயத்தையும் சிறிதாக அறிந்த ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து 350கிராம் விளக்கெண்ணெய்யில் இட்டு பதமாகக் காய்ச்சி வடித்து பத்திரப் படுத்திக் கொண்டு அந்தி, சந்தி இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் தணிந்து உடல் பெருகும், அழகான தோற்றம் பெருகும்.

சோற்றுக் கற்றாழை மடலை நன்கு முற்றியதாகத் தேர்ந்தெடுத்து இரண்டாகப் பிளந்து அதன் இடையே ஒரு ஸ்பூன் வெந்தயத்தைத் திணித்து கற்றாழையின் மடல்கள் இருபகுதியும் ஒன்றாகச் சேரும் வண்ணம் நூலால் இறுகக் கட்டி இரவு முழுவதும் வைத் திருந்து மறுநாள் காலையில் எடுத்துப் பார்க்கையில் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை மட்டும் எடுத்து உள் ளுக்கு சாப்பிட்டு வர தீராத வயிற்று வலி, வாய் வேக்காடு, வயிற்றுப்புண், சிறுநீர்த் தாரைப்புண் ஆகியன குணமாகும்.

கற்றாழைச் சோற்றை மோரில் கலந்து அன்றாடம் குடித்து வர உடல் சூட்டினால் ஏற்படும் முகப்பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை மற்றும் மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுக்கள் குணமாகும்.

சோற்றுக் கற்றாழையின் வேர்களைச் சேகரித்து சிறுதுண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து பால் ஆவியில் வைத்து வேகவைத்து எடுத்து வெயிலில் இட்டு உலர்த்தி நன்றாகப் பொடித்து வைத்துக் கொண்டு தினம் இரவு படுக்க போகுமுன் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை மிகும். விந்துக்களின் எண்ணிக்கையும் பெருகும்.

சோற்றுக் கற்றாழைச் சோற்றை சுத்தம் செய்து 10 முதல் 15 கிராம் அளவு எடுத்து நீராகாரத்துடன் (பழையது நீர்) சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சிறுநீரில் ரத்தம் போவது குணமாகும். மூத்திரக்கிரிசாம் என்னும் சிறுநீர்த்தாரை எரிச்சல் தணியும்.

சுத்திகரித்த கற்றாழைச் சோறு ஒருகப் அளவு எடுத்து இதனோடு 5 சிறு வெங்காயத்தைப் பொடித்து நெய் விட்டுச் சேர்த்து வதக்கிச் சேர்த்து சுடுக்காய் கொட்டை நீக்கியபின் மூன்று கடுக்காயின் தோலைப் பொடித்துச் சேர்த்து ஒன்று கலந்து சிறிதளவு நீர்விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடிவைத் திறந்து அரைமணி நேரம் கழித்துப் பார்க்க அனைத்துப் பொருட்களின் சாரமும் ஒன்றாய்க் கலந்து வடிந்து தெளிவாய் இருக்கும். இதை உள்ளுக்குச் சாப்பிட சில மணித் துளிகளில் சிறுநீர்கட்டு தளர்ந்து தாராளமாக சிறுநீர் வெளியேறும்.

சோற்றுக் கற்றாழைச் சாறை தினமும் 2 அவுன்ஸ் உள்ளுக்கு கொடுப்பதால் இதய ரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து படிவதால், ஏற்படும் இதய நோய்கள் அச்சம் தரும் உயிர் போக்கி நோய்களைத் தணிக்கிறது.

சோற்றுக் கற்றாழையில் உள்ள ஹார்போஹைட்ரேட்டு மெட்டபாலிசம் சர்க்கரை நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது ரத்தத்தில் உள்ள உணவுக்குமுன் ஆன சர்க்கரை அளவையும், உணவுக்குப் பின் ஆன சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.

இதயத்துக்கு போதிய பிராணவாயு கிடைக்க வழிசெய்கிறது. பிராணவாயு சரியான அளவு இதயத்துக்குக் கிடைக்காத போது கடும் நெஞ்சுவலி உண்டாகிறது. சோற்றுக் கற்றாழைச் சாறு இப்படி மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது.